/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் மோசடி வழக்கில் கைதான 3 பேரை விசாரிக்க கோர்ட் அனுமதி
/
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் மோசடி வழக்கில் கைதான 3 பேரை விசாரிக்க கோர்ட் அனுமதி
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் மோசடி வழக்கில் கைதான 3 பேரை விசாரிக்க கோர்ட் அனுமதி
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் மோசடி வழக்கில் கைதான 3 பேரை விசாரிக்க கோர்ட் அனுமதி
ADDED : செப் 12, 2024 03:18 AM
புதுச்சேரி : ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங்கில் முதலீடு செய்வதாக கூறி பல கோடி மோசடி செய்த வழக்கில் கைதான 3 பேரை, 7 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங்கில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என ஆசை காட்டி, போலி கால் சென்டர்கள் மூலம், புதுச்சேரி உட்பட பல மாநிலங்களை சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கியது.
இச்சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த பிரவீன், 31; பெங்களூரு முகமது அன்சர், 38; நெய்வேலி தவுபில் அகமது, 36; ஜெகதீஷ், 36; ராமச்சந்திரன், 32; பிரேம் ஆனந்த், 36; விமல்ராஜ், 34; ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இக்கும்பல், பெங்களூரு, நாமக்கல், நெய்வேலியில் போலியாக கால் சென்டர் நடத்தி மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.
நெய்வேலியில் இயங்கிய என்.டி.எஸ்., குருப் ஆப் கம்பெனி கால் சென்டரில் இருந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள கார்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிறையில் உள்ள பிரவீன், தவுபில் அகமது, ராமச்சந்திரன் ஆகியோரை 7 நாள் காவலில் விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மூவரையும் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
நாமக்கல், பெங்களூருவில் இயங்கிய என்.டி.எஸ்., குருப் ஆப் கம்பெனி அலுவலகங்களில் ஆய்வு செய்து பொருட்களை பறிமுதல் செய்ய இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் இரு தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

