/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்; போதிய பஸ் வசதி இன்றி தவிப்பு

ADDED : ஏப் 18, 2024 11:42 PM

புதுச்சேரி : புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தங்கி வேலை செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நேற்று பணிகளை முடித்து கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை, செஞ்சி, விருதாச்சலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல போதிய அளவில் பஸ்கள் இல்லாததால், பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் ஏற்படும் டிராபிக்கில் சிக்குவதிற்கு பயந்து வெளியே சென்றன.
இதனால் பஸ் கிடைக்காமல் பல மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர். பஸ் நிலையத்திற்குள் வந்த ஒரு சில பஸ்களில் முண்டியடித்து ஏறி கூட்ட நெரிசலில் சிக்கியபடி பயணித்தனர்.