sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலுார் தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார்

/

கடலுார் தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார்

கடலுார் தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார்

கடலுார் தி.மு.க., கவுன்சிலர் திருமணம் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார்


ADDED : ஆக 31, 2024 02:05 AM

Google News

ADDED : ஆக 31, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கடலுார் தி.மு.க., கவுன்சிலரின் திருமணத்தை அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார்.

கடலுார் எல்.எஸ்.எஸ்., குரூப் கம்பெனி இயக்குனர் கே.ஜி.எஸ்., தினகரன்-கமலி தம்பதி மகனும், கடலுார் மாநகர தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளருமான கவுன்சிலர் சரத், வேலுார் மாவட்டம், காட்பாடி பிச்சாண்டி - தாட்சாயிணி தம்பதி மகள் நிவேதிதா திருமணம், புதுச்சேரி அடுத்த பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.

திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

தற்போது ஆண்களுக்கு நிகராக கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். அதற்கு, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களே காரணம். தமிழகத்தில் மகளிருக்கான சொத்துரிமை சட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் செயல்படுத்தப்பட்டது.

அவரைத் தொடர்ந்து தற்போது இலவச பஸ் பயண திட்டம் உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. இலவச பஸ் பயணத் திட்டத்தில் இதுவரை, 520 கோடி பயணங்கள் பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

புதுமைப்பெண் திட்டத்தால் தமிழகத்தில் உயர் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தால் 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.60 கோடி பேர் பயனடைகின்றனர். நான் முதல்வன் திட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தி.க., தலைவர் வீரமணி, அமைச்சர்கள் பொன்முடி, பன்னீர்செல்வம், கணேசன், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், சிந்தனைச் செல்வன், அன்னியூர் சிவா, புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

லட்சுமி செக்யூரிட்டி குரூப் கம்பெனி இயக்குனர் கே.ஜி.எஸ்., தினகரன்-கமலி, பிச்சாண்டி - தாட்சாயிணி, யோகேஷ் தினகரன் ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us