/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய பல்கலை இளங்கலை சேர்க்கைக்கு கியூட் நுழைவு தேர்வு
/
மத்திய பல்கலை இளங்கலை சேர்க்கைக்கு கியூட் நுழைவு தேர்வு
மத்திய பல்கலை இளங்கலை சேர்க்கைக்கு கியூட் நுழைவு தேர்வு
மத்திய பல்கலை இளங்கலை சேர்க்கைக்கு கியூட் நுழைவு தேர்வு
ADDED : மார் 24, 2024 04:30 AM
விண்ணப்பிக்க 26ம் தேதி கடைசி நாள்
புதுச்சேரி: மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் இளங்கலை (யு.ஜி.) பாட பிரிவுகளில் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க 26ம் தேதி கடைசி நாளாகும்.
மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி., கீழ் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள், தன்னாட்சி கல்லுாரிகளில் உள்ள இளங்கலை பாட பிரிவுகளில் சேர்க்கை பெற பொது பல்கலைக்கழக நுழைவு (கியூட்) தேர்வு நடத்துகிறது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இத்தேர்வு மூலம் புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் நாட்டில் உள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்கள், 30 மாநில பல்கலைக்கழகங்கள், 113 தனியார் பல்கலைக் கழகங்கள், 9 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பாட பிரிவுகளில் சேர்க்கை பெறலாம்.
இதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பப் படிவங்களுக்கான பதிவு https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நாளை மறுநாள் 26ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
தகுதி உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நாளை மறுநாள் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தகுதி அளவுகோல்கள், தேர்வுக்கான திட்டம், தேர்வுக் கட்டணம் மற்றும் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகியவை என்.டி.ஏ., https://exams.nta.ac.in/CUET-UG இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

