/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ.1.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
/
6 பேரிடம் ரூ.1.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
6 பேரிடம் ரூ.1.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
6 பேரிடம் ரூ.1.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : மே 13, 2024 04:58 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் 1.6 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் சரவணன்குமார். அவரது வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 36 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். ஆன்லைன் மூலம் வேலை செய்தற்கான பணத்தையும் அவரால் எடுக்க முடியாமல் போனது.
அதே போன்று, சூரியா. இவரது மொபைல் போனில் பேசிய மர்ம நபர், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என பேசினார். அந்த ஆசையில், அவர், 71 ஆயிரம் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தார்.
தொடர்ந்து, சுதா நீட் பயிற்சிக்காக தனியார் நிறுவனத்தில் 15 ஆயிரம் ரூபாய் பணம் கட்டியுள்ளார். பயிற்சி வேண்டாம் என கூறினார். ஆனால் பணம் திரும்ப வரவில்லை.
தொடர்ந்து, கீர்த்திவர்மன், ஆன்லைன் மூலம் பிரீ பையர் கேம் விளையாட 18 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஐயப்பன் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் 10 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். அதே போல கதிரவனின் வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, 6 பேரும் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.