ADDED : ஆக 26, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரி வரிச்சிக்குடி பெருமாள் கோவில் தெருவில் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜூன் 10ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது.
அதற்கான கல்வெட்டு கோவில் நிர்வாகம் சார்பில், வெளிப்பூர பகுதி யில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி அகத்தீஸ்வரர் கோவில் கல்வெட்டை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிந்து, சேதப்படுத்தியது யார் என, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.

