/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யூ.ஜி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

ADDED : ஆக 24, 2024 06:17 AM
புதுச்சேரி: பல்கலைக்கழகத்தில் உள்ள யூ.ஜி., பி.டெக்., எம்.ஏ., சீல் ஐந்தாண்டு படிப்பிற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக பி.ஏ., தமிழ், ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், அரசியல் அறிவியல், பி.காம்., பொது, பி.பி.ஏ., உள்பட 18 வகை யூ.ஜி., படிப்புகள் உள்ளன.
பி.வி.ஏ., ஓவியம், பி.எஸ்.சி., கம்யூட்டர் சயின்ஸ், பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., ஆற்றல் அறிவியல் தொழில்நுட்பம், மெட்ரீயல் சயின்ஸ்டெக்னாலஜி, எம்.ஏ., சீல்ஒருங்கிணைந்த படிப்பு உள்ளிட்ட யூ.ஜி., படிப்புகளும் உள்ளன.
பல்கலைகழகத்தில் உள்ள 28 யூ.ஜி., படிப்புகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் ஆன்லைனில் விண் ணப்பங்கள் கடந்த 21ம் தேதி வரை பெறப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பத்தை சரியாக பதிவு செய்யாத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்க புதுச்சேரி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் விண்ணப்பிக்க காலக்கெடுவை வரும் 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
விண்ணப்பிக்க கியூட் - யூ.ஜி., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2024-25 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.