/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்:4 பேருக்கு வலை
/
ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்:4 பேருக்கு வலை
ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்:4 பேருக்கு வலை
ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்:4 பேருக்கு வலை
ADDED : மே 28, 2024 03:38 AM
அரியாங்குப்பம், : முதலியார்பேட்டை, தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 49; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
வீட்டின் உரிமையாளர் பிரான்சில் உள்ளார். வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் வீட்டை காலி செய்யாமல், காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று நோதாஜி நகரை சேர்ந்த பூபாலன், ஜெயபால், ஹாசன், கணேசன் ஆகியோர் வெங்கடேசனிடம் தகராறு செய்து, அவதுாறாக பேசி, வீட்டை காலி செய்ய வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.