ADDED : ஏப் 24, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தக்குமார் 35; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகவேல் 35; ரங்கநாதன்24; தரப்பினருக்கும், முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நந்தக்குமார் தனது சகோதரர் சிவக்குமார் (எ) சிவராஜ் என்பவருடன், பரிக்கல்பட்டு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மதுபான கடை அருகே சென்றபோது, முருகவேல், ரங்கநாதன் இருவரும் வழிமறித்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

