/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆஞ்சநேயர் கோவிலில் தீப ஒளி திருவிழா
/
ஆஞ்சநேயர் கோவிலில் தீப ஒளி திருவிழா
ADDED : ஏப் 09, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் 36ம் ஆண்டு தீப ஒளி திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 7.00 மணிக்கு கோவிலில் உள்ள ஆதி அந்த விநாயகர், செல்வ விநாயகர், பாலமுருகன், மரகதவல்லி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர், குரு தட்சிணாமூர்த்தி, கருடபகவான், கால பைரவர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபி ேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றுதல், தீபாரதனைகள் நடக்கிறது.
மாலை 6.00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீப ஒளி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிள் செய்துள்ளனர்.

