/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகள் மீது அவதுாறு காங்.,பிரமுகர் மீது வழக்கு
/
அதிகாரிகள் மீது அவதுாறு காங்.,பிரமுகர் மீது வழக்கு
அதிகாரிகள் மீது அவதுாறு காங்.,பிரமுகர் மீது வழக்கு
அதிகாரிகள் மீது அவதுாறு காங்.,பிரமுகர் மீது வழக்கு
ADDED : மே 27, 2024 05:10 AM
காரைக்கால்: காரைக்காலில் மின்னஞ்சல் மூலம் அதிகாரிகள் பற்றி அவதுாறு பரப்பிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பொன் முருகன் இவர் சமூக ஆர்வலராக பல்வேறு பணிகள் செய்து வருகிறார்.
இவரது மின்னஞ்சல் முகவரியை போலியாக பயன்படுத்தி கடந்த ஜனவரி 17ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து வழக்கறிஞர் பொன் முருகனை விசாரித்த போது அவரது மின்னஞ்சல் மூலம் போலி முகவரியை பயன்படுத்தி வேறு நபர் அவதுாறு பரப்பியது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதில் காரைக்கால் விழுதியூர் பகுதியை சேர்ந்த காங்., பிரமுகர் ராஜகோபால் (எ) கருணாநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

