/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் காரைக்காலில் அனுப்பி வைப்பு
/
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் காரைக்காலில் அனுப்பி வைப்பு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் காரைக்காலில் அனுப்பி வைப்பு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் காரைக்காலில் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 18, 2024 11:44 PM

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
லோக்சபா தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருநள்ளார், நெடுங்காடு, நிரவி திருப்பட்டினம் ஆகிய ஐந்து தொகுதிகளில் 164 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று மதியம் துவங்கியது. மத்திய தேர்தல் பார்வையாளர் அசித்தா மிஸ்ரா, மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன், சீனியர் எஸ்.பி., மனீஷ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அண்ணா கலைக் கல்லுாரி, கலைஞர் பட்டமேற்படிப்பு மையத்தில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த ஓட்டுச் சாவடிகளுக்கு பிரித்து வாகனங்களில் அனுப்பப்பட்டன. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுடன் ஆயுதம் ஏந்திய போலீசார் உடன் சென்றனர்.
164 ஓட்டுச் சாவடிகளில் 35 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என, கண்டறியப்பட்டுள்ளது. கேமரா மூலம் காண்காணிக்கப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல்துறை அறிவுறுத்தியுள்ளது.

