/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதமான சமூதாய நலக்கூடம் புதிதாக கட்ட கோரிக்கை
/
சேதமான சமூதாய நலக்கூடம் புதிதாக கட்ட கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 04:16 AM

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி அருகே சேதமடைந்த சமூதாய நலக்கூடத்தை புதிதாக கட்ட வேண்டும் என அ.தி.மு.க., சார்பில், கோரிக்கை மனு கொடுத்தனர்.
தட்டாஞ்சாவடி அ.தி.மு.க, தொகுதி செயலாளர் கமல்தாஸ் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரிடம் கொடுத்துள்ள மனுவில்,
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட செயின்ட்பால்பேட் ராஜாஜி நகர் பகுதியில், சமூதாய நலக்கூடம் இருந்தது. இந்த நலக்கூடம் சேதமடைந்ததால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த சமூதாய நலக்கூடத்தை இடித்து விட்டு, அங்கு
புதிய கட்டடம் கட்ட வேண்டும். அதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.