/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுதானியம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க கோரிக்கை
/
சிறுதானியம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க கோரிக்கை
சிறுதானியம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க கோரிக்கை
சிறுதானியம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 01:48 AM
புதுச்சேரி : பயிறு வகைகள், எள், மணிலா, சிறு தானிய பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி மானிய தொகையை விரைவாக வழங்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க செயலாளர் ரவி அறிக்கை;
புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் செயல்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் மூலம், உயர் ரக நெல், பாரம்பரிய நெல், கரும்பு, மணிலா, எள், பயிறு வகைகள், பருத்தி, சிறுதானிய பயிர்கள், தீவனப்புல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி மானியம் வழங்கப்படும்.
இந்த ஊக்க தொகை 2023-24 வது ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடி செய்த பொது பிரிவு 4,758 விவசாயிககள், 446 அட்டவணை பிரிவு விவசாயிகள், பாரம்பரிய நெல் சாகுபடி செய்த 96 பொது பிரிவு விவசாயிகள், 7 அட்டவணை சார்ந்த விவசாயிகள், விதை உற்பத்தி செய்த 9 விவசாயிகள் என மொத்தம் 5,416 பேருக்கு கடந்த ஜூன் மாதம் ஊக்க தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.
ஊக்க தொகை வங்கி மூலம் விவசாயிகள் கணக்கில் வரவு வகை்கப்பட்டது. இதில், பயிறு வகைகள், எள், மணிலா, பருத்தி, சிறு தானிய பயிர்கள், தீவனப்புல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
புதுச்சேரி அரசு மற்றும் வேளாண் துறை விவசாயிகளுக்குள் பாகுபாடு பார்க்க கூடாது. காலம் கடத்தாமல் விடுப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்க தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.