/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாடத்திட்டத்தில் குற்றவியல் மசோதா அறிமுகப்படுத்த கோரிக்கை
/
பாடத்திட்டத்தில் குற்றவியல் மசோதா அறிமுகப்படுத்த கோரிக்கை
பாடத்திட்டத்தில் குற்றவியல் மசோதா அறிமுகப்படுத்த கோரிக்கை
பாடத்திட்டத்தில் குற்றவியல் மசோதா அறிமுகப்படுத்த கோரிக்கை
ADDED : மே 29, 2024 05:23 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டத்துறை செயலாளர் சத்தியமூர்த்தி, உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரக செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்;
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக கடந்த 2023ல், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக் ஷ்ய அத்ஹினியம் ஆகியவை லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த புதிய சட்டங்கள் இந்தாண்டு, ஜூலை முதல் தேதி நடைமுறைக்கு வருகிறது.
புதிய சட்டங்கள் மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதையும், நீதித்துறை மற்றும் நீதிமன்ற மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. புதிய சட்டங்கள் பற்றி நாட்டில் நீதி நிர்வாகம், சட்டக்கல்வியை தொடரும் மாணவர்கள் அறிந்து கொள்ள, பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது கல்வி நிறுவனங்களுக்கு இன்றியமையாததாகும்.
அதனால் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.
எனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவற்கான, பாடத்திட்டங்களை மறு வடிவமைக்க யூனியன் பிரதேசத்தின் வரம்பிற்குட்பட்ட பல்கலைக்கழகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக்கல்லுாரிகள் ஆகியவற்றை அலுவலக நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.