ADDED : மே 02, 2026 10:04 PM
புதுச்சேரி: பாண்டெக்ஸ் சங்க ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கவர்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாண்டெக்ஸ் ஊழியர்கள் தொழிற்சங்களின் ஒருங்கிணைப்புக்குழு கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மாதம் அரசிடம் இருந்து தள்ளுபடி மானியம் 4.60 கோடி ரூபாய் வந்துள்ளது. சங்க ஊழியர்களுக்கு பாண்டெக்ஸ் நிர்வாகம் கடந்த 67 மாத சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதனால், ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10 மாதம் சம்பளத்தை வழங்க வேண்டும் என, மேலாண் இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், கடந்த 28ம் தேதி முதல் போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க அதிகாரிகளுக்கு, கவர்னர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
