/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடி தொகுதியில் மின்வெட்டு புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை

ADDED : ஜூன் 27, 2024 02:42 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி பகுதியில் தொடர் மின்வெட்டை தடுக்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தட்டாஞ்சாவடி தொகுதி அ.தி.மு.க., செயலாளர் கமல்தாஸ் மின்துறை தலைமை பொறியாளர் சந்திரமவுலியிடம் அளித்த மனு;
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுவதால், வீடுகளில் உள்ள பிரிட்ஜ், ஏ.சி., வாஷிங் மெஷின், டி.வி., போன்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
மேலும், தட்டாஞ்சாவடி பகுதியில் பல இடங்களில் மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து, மின் ஒயர்கள் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மின் மின்கம்பங்கள், புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர நடவடிக்கை வேண்டும். மாநில துணை செயலாளர் நாகமணி, தொகுதி மேலவை பிதிநிதி நாராயணசாமி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.