sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்: போலீஸ் குவிப்பு

/

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்: போலீஸ் குவிப்பு

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்: போலீஸ் குவிப்பு

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்: போலீஸ் குவிப்பு


ADDED : மே 02, 2024 12:28 AM

Google News

ADDED : மே 02, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டியில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவிலை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.

விழுப்புரம் வழுதரெட்டி காலனியில், கலைஞர் அறிவாலயம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து 7 கூரை வீடுகள், ஒரு கல்வீடு, அங்காளம்மன் கோவில் மற்றும் பெரியாயி அம்மன் கோவில் கட்டியுள்ளனர். 4 ஆண்டிற்கு முன் அங்காளம்மன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

இந்நிலையில், மயான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மயான ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டிற்கு முன் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு முன் அதிகாரிகள் நான்கு கூரை வீடுகளை அகற்றினர். ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் காலஅவகாசம் கோரியதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி ஆணையர் ரமேஷ், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரியாயி அம்மன் கோவிலை இடித்து அகற்றினர். தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்காளம்மன் கோவிலை இடிக்க முயன்றனர். உடன் அப்பகுதி கவுன்சிலர்கள் வி.சி., பெரியார், அ.தி.மு.க., கலை மற்றும் பொதுமக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களிடம், அதிகாரிகள் இது கோர்ட் தீர்ப்பு. ஏற்கனவே 2 ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. கோர்ட் அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். அதனால், இனி அவகாசம் வழங்க முடியாது. கோர்ட்டில் தான் நீங்கள் முறையிட வேண்டும் என்றனர். அப்போது பெண்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் மண்ணை அள்ளி வீசினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கோவிலை மாற்றியமைக்க அரசு தரப்பில் இடம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனையேற்று ஒரு வாரம் அவகாசம் அளித்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை ஒத்திவைத்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us