sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 05, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 06:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி நகராட்சியில் பணிபுரிந்து இறந்துபோன மற்றும் மருத்துவ ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் வேலை கேட்டு 177 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில், அண்ணா சிலை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் ஆனந்த் கணபதி தலைமை தாங்கினார். வாரிசுதாரர் சங்க செயலாளர் சத்தியன், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்தோபர், நிர்வாகி நமச்சிவாயம் சிறப்புரையாற்றினர்.

நகராட்சி சங்க தலைவர் கலியபெருமாள், செயலாளர் வேளாண்கண்ணிதாசன், வாரிசுதாரர் சங்க பொறுப்பாளர் ரவி, பொருளாளர் லாரன்ஸ் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us