/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறு நாள் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
/
நுாறு நாள் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : செப் 01, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார், கல்மண்டபம் கிராமத்தில் நுாறு நாள் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், கரையாம்புத்துார், கல்மண்டபம் பஞ்சாயத்துகளில் உள்ள ஏரிகளை ரூ. 60 லட்சம் செலவில், துார் வாரப்பட உள்ளது.
இப்பணியை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி துறை இயக்குனர் அருள்ராஜ், செயற்பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.