தேர்தலில் தோல்வியை தழுவிய தேசி மாநில கட்சி தலைவர்கள்
தேர்தலில் தோல்வியை தழுவிய தேசி மாநில கட்சி தலைவர்கள்
ADDED : மே 05, 2026 11:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தேசிய கட்சிகளான காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் தட்டாஞ்சாவடி தொகுதியில், என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜ., சார்பில் மாநில தலைவர் ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ்க்கு எதிராகவும், மாநில கட்சியான தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, வில்லியனுார் தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாருக்கு எதிராக போட்டியிட்டனர்.
அதில், மூன்று கட்சிகளின் மாநில தலைவர்களும் தோல்வி அடைந்தனர். இதேபோல், மணவெளி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட சபாநாயகர் செல்வம், ஏம்பலம்(தனி) தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கந்தசாமி, நெடுங்காடு(தனி) தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சீட்டிங் எம்.எல்.ஏ.,க்களும் தோல்வி அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் முக்கிய 2 தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சியின் மாநில தலைவர்கள் ஒரே தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
