/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி வளாகத்தில் குளவி கூடு அழிப்பு
/
பள்ளி வளாகத்தில் குளவி கூடு அழிப்பு
ADDED : செப் 01, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கொரவள்ளிமேடு அரசு பள்ளி வளாகத்தில் இருந்த விஷக் குளவி கூட்டை, தீயணைப்பு துறையினர் நேற்று இரவு தீ வைத்து அழித்தனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த கொரவள்ளிமேடு கிராமத்தில் தியாகி சுப்ரமணிய படையாச்சி அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் விஷக் குளவிகள் கூடு கட்டி இருந்தன. இந்த குளவிகள், பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன. இந்த குளவிக் கூட்டினை அழிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நேற்று முன்தினம் இரவு பனை மரத்தில் இருந்த விஷ குளவி கூடை தீ வைத்து எரித்து அழித்தனர்.