/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சாவுக்கு எதிரான சோதனை தொடரும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் அறிவிப்பு
/
கஞ்சாவுக்கு எதிரான சோதனை தொடரும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் அறிவிப்பு
கஞ்சாவுக்கு எதிரான சோதனை தொடரும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் அறிவிப்பு
கஞ்சாவுக்கு எதிரான சோதனை தொடரும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் அறிவிப்பு
ADDED : மே 28, 2024 03:59 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் நீங்கும் வரை சோதனைகள் தொடரும் என டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இளைஞர்களிடம் போதை பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மிஷன் இளமை திட்டத்தை புதுச்சேரி போலீசார் துவக்கி உள்ளனர்.
இத்திட்டத்தின் வேலையில்லாத வாலிபர்கள் விரும்ப தகாத செயல்களில் ஈடுப்படுவதை தடுக்க விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கேரம் போட்டி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 3 நாள் நடைபெறும் பீச் வாலிபால் போட்டி புதுச்சேரி கடற்கரையில் நேற்று துவங்கியது. போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் போட்டிகளை துவக்கி வைத்து கூறியதாவது;
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைத்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதை பொருட்கள் விற்பனை நீங்கும் வரை சோதனை தொடரும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பிரச்னை போலீசாருடையது மட்டும் இல்லை. சமூகத்திற்கும் இதில் பொறுப்பு உண்டு.
குழந்தைகளை பெற்றோரும், மாணவர்களை பேராசிரியர்களும் கவனிக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.