/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷனில் டி.ஜி.பி., திடீர் ஆய்வு
/
போலீஸ் ஸ்டேஷனில் டி.ஜி.பி., திடீர் ஆய்வு
ADDED : ஆக 27, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனை, டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று மாலை ஆய்வு செய்தார்.
பின்னர், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி.,க்கள் லட்சுமி சவுஜன்யா, செல்வம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெய்சங்கர் மற்றும் முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, காலாப்பட்டு நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விபரங்களை கேட்டறிந்த டி.ஜி.பி., சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஆலோசனை வழங்கினார்.