/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி.ஜி.பி., விசாரணையால் இடமாற்றம் உத்தரவு ரத்து மீண்டும் பெரியக்கடைக்கு திரும்பிய இன்ஸ்பெக்டர்
/
டி.ஜி.பி., விசாரணையால் இடமாற்றம் உத்தரவு ரத்து மீண்டும் பெரியக்கடைக்கு திரும்பிய இன்ஸ்பெக்டர்
டி.ஜி.பி., விசாரணையால் இடமாற்றம் உத்தரவு ரத்து மீண்டும் பெரியக்கடைக்கு திரும்பிய இன்ஸ்பெக்டர்
டி.ஜி.பி., விசாரணையால் இடமாற்றம் உத்தரவு ரத்து மீண்டும் பெரியக்கடைக்கு திரும்பிய இன்ஸ்பெக்டர்
ADDED : ஜூலை 16, 2024 05:01 AM
புதுச்சேரி: இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி., வெளியிட்ட வாய்மொழி உத்தரவு ரத்து செய்யப்பட்டு நேற்று பெரியக்கடைக்கு திரும்பினார்.
புதுச்சேரியில் உள்ள பிரஞ்சு துணை துாதகரத்தில் நேற்று முன்தினம் இரவு பிரஞ்சு தேசிய தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்க புதுச்சேரி அரசின் முக்கிய துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போலீஸ் சார்பில் டி.ஜி.பி.,க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
டி.ஜி.பி., ஊரில் இல்லாததால், டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் யாதவ் விழாவில் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் யாதவுக்கு, விழா அரங்கில் சரியான உபசரிப்பு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த டி.ஐ.ஜி., அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம், ஏன் முன் ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை என கடிந்து கொண்டதுடன், நாளை முதல் ஆயுதப்படைக்கு செல் என வாய்மொழி உத்தரவு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பிரஞ்சு துணை துாதகரத்தில் நடக்கும் விழாக்களில் வெளியாட்கள் எளிதில் செல்ல முடியாது.
கடும் கட்டுப்பாடகள் விதிக்கப்பட்டு இருக்கும். இந்த விழாவில் டி.ஐ.ஜி., க்கு சரியான மேஜை, இருக்கை ஏற்பாடு செய்யவில்லை என இன்ஸ்பெக்டர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் விமர்சனத்திற்கு ஆளானது.
இதை அறிந்த டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை அழைத்து, விழாவில் நடந்தது குறித்து விளக்கம் கேட்டார்.
அதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி., கூறிய வாய்மொழி உத்தரவை ரத்து செய்து பணிக்கு திரும்ப டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று மாலை பெரியக்கடை போலீசில் வழக்கமான பணியை தொடர்ந்தார்.