/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலெக்டர் அலுவலகத்தில் டிஜிட்டல் சேவை பயிலரங்கம்
/
கலெக்டர் அலுவலகத்தில் டிஜிட்டல் சேவை பயிலரங்கம்
ADDED : பிப் 22, 2025 04:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் டிஜிட்டல் இந்தியா பொது சேவை மைய திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நேற்று நடந்தது.
செயலாக்க அதிகாரி வினோத் குரியாக்கோஸ் வரவேற்றார். தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக துணை இயக்குநர் சபரி கிரிஷ் நோக்கவுரையாற்றினார். சிறப்பு அமர்வில் தகவல் தொழில்நுட்ப துறை இயக்குநர் சிவராஜ் மீனா, மாநில தகவியல் பிரிவு அதிகாரி கோபிசுவாமிநாதன் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
கலெக்டர் குலோத்துங்கன் பொது சேவை மையங்களின் கிராமப்புற தொழில்முனைவோர்களின் குறைகளை கேட்டறிந்தார். சேவைகளை மேம்படுத்துவது, அரசு திட்டங்களை எளிதாக மக்களிடம் சேர்ப்பது, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில தலைமை மேலாளர் இளந்திரையன் நன்றி கூறினார்.

