ADDED : ஆக 25, 2024 05:36 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மன்னாதிசுவரர் பச்சைவாழி அம்மன் கோவில், தீமிதி விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியாங்குப்பம் அடுத்த டோல்கேட் பகுதியில் மன்னாதிசுவரர் பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், மாலை 6:00 மணிக்கு, அக்னி, சக்தி, கரகங்கள் எடுத்து பக்தர்கள் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.
