/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
/
கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED : ஏப் 26, 2024 05:31 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதிவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணி பொங்கல் நடந்தது. தொடர்ந்து, படுகளம் நிகழ்ச்சி மற்றும்அம்மனுக்கு சாந்தகாப்பு அலகாரம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் ரமணி நடராஜன், திருக்குமரன், உஷா கலியபெருமாள், லட்சுமணன், நரசிம்மன்உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர்.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

