/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் துவக்கம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் துவக்கம்
ADDED : மே 15, 2024 11:07 PM

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு கங்கையம்மனுக்கு பால் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
வரும் 27ம் தேதி காலை 10;00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு கரகம் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகாசசூரன் வதம், 29ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அர்ஜுனன்-திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம், இரவு 7:00 மணிக்கு மேல், முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 31ம் தேதி பகல் 12 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மணிமாறன், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.