/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா மாணவர்கள் பேட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா மாணவர்கள் பேட்டி
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா மாணவர்கள் பேட்டி
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா மாணவர்கள் பேட்டி
ADDED : செப் 07, 2024 07:12 AM

அரிய தகவல்கள் உள்ளன
ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு, 'தினமலர் - பட்டம்' இதழ் வாங்கிப் படித்தேன். அதில், பொதுஅறிவு உட்பட பல்வேறு அரிய தகவல்கள் உள்ளன. பட்டம் இதழை படித்ததினால், இன்று (நேற்று) நடந்த வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற முடிந்தது. தொடர்ந்து பட்டம் இதழ் படித்து விருது பெறுவதே எனது லட்சியம்.
-தரணீஷ், பிளஸ் 1
போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி
'தினமலர் - பட்டம்' இதழின் வினாடி - வினா போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும், முதலிடம் பிடித்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. போட்டியில் பங்கேற்கும் முன் எங்கள் ஆசிரியர்கள் அமைதியாகவும், நிதானமாகவும் இருங்கள். கேள்வியை நன்கு புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள் வெற்றி பெறலாம் என்றார். அதன்படி வெற்றி பெற்றோம்.
- ரிச்சர்டு சாமுவேல், பிளஸ் 1
அறிவு பெட்டகம்
'தினமலர் - பட்டம்' இதழ் பாட புத்தங்களைத் தாண்டி, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான தகவல்கள், வரலாறு, புவியியல் என அனைத்து முக்கிய தகவல்களும் அடங்கியுள்ளன. 'தினமலர் - பட்டம்' இதழை மற்ற மாணவர்களும் படிக்க வேண்டும். ஏனென்றால் 'தினமலர் - பட்டம்' இதழ் அறிவு பெட்டகமாக உள்ளது.
- பிரகதி, பிளஸ் 2
பட்டம் படித்து விருது பெறுவேன்
'தினமலர் - பட்டம்' இதழை தினசரி படித்து வருகிறேன். இதில், பொதுஅறிவு, போட்டித் தேர்வுகளுக்கான தகவல்கள் உட்பட பல்வேறு முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கியுள்ளன. கேள்வி கேட்கும் போது திக்... திக்... என இருந்தது. ஆனால் பதில் சொல்லும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து 'தினமலர் - பட்டம்' இதழ் படித்து புதுச்சேரியில் நடக்கும் போட்டியில் பங்கேற்று விருது பெறுவேன்.
-பிரியதர்ஷினி, பிளஸ் 1