/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிசை மாற்று வாரியத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
/
குடிசை மாற்று வாரியத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
குடிசை மாற்று வாரியத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
குடிசை மாற்று வாரியத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
ADDED : மார் 06, 2025 03:29 AM

புதுச்சேரி : அடுக்குமாடி குடியிருப்புகளில் 5 சதவீத ஒதுக்கீடு வழங்கக்கோரி, குடிசைமாற்று வாரியத்தை, மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க கோரி, மாற்றுத்திறனாளிகள், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிகரம் புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வழங்கக் கோரி நேற்று பெரியார் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சங்க பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் குமார், கந்தசாமி, ரவி, மோகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தின் வாசலில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தற்போது வாரியத்தால் கட்டப்பட்டு வரும், குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.