/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லேசான மழைக்கே வெள்ளக்காடாகும் சாலைகள் தீர்வு குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
/
லேசான மழைக்கே வெள்ளக்காடாகும் சாலைகள் தீர்வு குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
லேசான மழைக்கே வெள்ளக்காடாகும் சாலைகள் தீர்வு குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
லேசான மழைக்கே வெள்ளக்காடாகும் சாலைகள் தீர்வு குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
ADDED : ஆக 21, 2024 07:41 AM

புதுச்சேரி : நகரப் பகுதியில் மழைநீர் பாதிப்புகள் குறித்து, அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில், கடந்த 13ம் தேதி, இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கே நகரத்து வீதிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெரும்பாலான வீதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கியதுடன், மழை நீர் வடிவதற்கு பல மணி நேரமானது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
இதையடுத்து, நகரப் பகுதி தெருக்களில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிப்பதற்காக, அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என வக்கீல் பிரதீஷ் இருதயராஜ், பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்தகுமார் ரேவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதன்படி, கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், தி.மு.க., அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சிவக்குமார், மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம், காங்., வக்கீல் அணி தலைவரும், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளருமான மருதுபாண்டியன்,
இ.கம்யூ., நிர்வாகி அந்தோணி, பா.ஜ., நிர்வாகி விக்டர் விஜயராஜ், காங்., நிர்வாகிகள் வேல்முருகன், விஜயக்குமார், ராஜ்மோகன், ஜோசப் ஆரோக்கியசாமி, சமூக ஆர்வலர்கள் சாமி ஆரோக்கிய சாமி, நுார் சாகிப், கணேசமூர்த்தி, தொழிலதிபர் கிரிஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மழை நீர் தேங்குவதற்கான காரணங்களை கேட்டறிந்த பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதிகாரிகளுக்கு, வக்கீல் பிரதீஷ் இருதயராஜ் நன்றி தெரிவித்தார்.

