/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபைக்கு தாமதாக வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்; 'திடுக்' குற்றச்சாட்டு
/
சட்டசபைக்கு தாமதாக வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்; 'திடுக்' குற்றச்சாட்டு
சட்டசபைக்கு தாமதாக வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்; 'திடுக்' குற்றச்சாட்டு
சட்டசபைக்கு தாமதாக வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்; 'திடுக்' குற்றச்சாட்டு
ADDED : ஆக 03, 2024 04:37 AM
மத்திய அரசை நேரடியாக சந்தித்து மாநில வளர்ச்சிக்கான முழு நிதியையும் பெற்று புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.
முதல்வர் ரங்கசாமி சட்டசபையில், நேற்று நிதி நிலை அறிக்கையை வாசிக்க துவங்கி, 5 நிமிடங்கள் கடந்த பிறகு, பா.ஜ., அதிருப்தி மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், ஜான்குமார், அங்காளன் உள்பட, 5 பேர் சட்டசபைக்கு வந்தனர்.
அவர்கள் கூறியதாவது:
மத்தியில் நடைபெற்ற நிதி ஆய்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புதுச்சேரியில் பா.ஜ., மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
நம்முடைய முதல்வர், புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்திருந்தால் மத்திய அரசின் நிதி ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு நமக்கு தேவையான நிதியை பெற்றிருக்க முடியும்.
சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களையும் துறை வாரியாக சந்தித்து ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் ரூ.50 கோடி என சேகரித்து இருந்தால் கூட இன்று நமது மாநிலத்திற்கு பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்று வந்திருக்க முடியும்.
மத்திய அரசை நேரடியாக சந்தித்து மாநில வளர்ச்சிக்கான முழு நிதியையும் பெற்று புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.