ADDED : ஏப் 01, 2024 06:26 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முத்துவேல் 34, இவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் மது குடித்துவிட்டு மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நின்று அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்களை பார்த்து ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் முத்துவேல் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
