/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முறைகேடு புகார் எதிரொலி திருபுவனை கூட்டுறவு சங்கம் கலைப்பு
/
முறைகேடு புகார் எதிரொலி திருபுவனை கூட்டுறவு சங்கம் கலைப்பு
முறைகேடு புகார் எதிரொலி திருபுவனை கூட்டுறவு சங்கம் கலைப்பு
முறைகேடு புகார் எதிரொலி திருபுவனை கூட்டுறவு சங்கம் கலைப்பு
ADDED : செப் 12, 2024 03:19 AM
திருபுவனை : திருபுவனையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம், முறைகேடுகள் புகார் எதிரொலி காரணமாக கலைக்கப்பட்டது.
திருபுவனை கூட்டுறவு சங்கத்தில் திருபுவனை மற்றும் சுற்றியுள்ள 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 6,500 பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.
இந்த சங்கத்தில் வெங்கடாஜலபதி தலைவராகவும், முருகன் துணை தலைவராகவும், உதயசூரியன், ராமக்கிருஷ்ணன், அருள்வாணன், சத்தியசீலன், சரவணன், ரவிக்குமார் ஆகியோர் இயக்குனர்களாக செயல்பட்டு வந்தனர்.
கூட்டுறவு சங்கத்தில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு புகார்கள் சென்றது. இது குறித்து திருபுவனை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறப்பட்டது.
புகார் குறித்து, கூட்டுறவு சங்க பதிவாளர் நியமித்த அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர். இதில், திருபுவனை கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பது தெரிவந்தது.
கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்படும் விவசாயிகளுக்கான மானிய உரத்தை தனியார் நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்றது. விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்ட டிராக்டரை பில் இல்லாமல் இயக்கியது. டிராக்டர் வாடகையை முறையாக கணக்கில் கொண்டுவராதது. முறையற்றவர்களுக்கு லோன் வழங்கி 1 கோடி ரூபாய் வரை சங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியது பல புகார்கள் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஸ்வந்தையா திருபுவனை கூட்டுறவு சங்கத்தை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து திருபுவனை கூட்டுறவு சங்கத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.