/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகித்தால் புகார் செய்யலாம்
/
வாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகித்தால் புகார் செய்யலாம்
வாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகித்தால் புகார் செய்யலாம்
வாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகித்தால் புகார் செய்யலாம்
ADDED : ஏப் 02, 2024 04:32 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில், மதுபானங்களை சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தால் பொதுமக்கள் புகார் செய்யலாம் என, கலால்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல்வேறு இடங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, 15 சோதனை சாவடிகளை அமைத்து, கலால்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனை சாவடிகள் அனைத்திலும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கலால் துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும், இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த, 15 சோதனை சாவடிகளையும், சி.சி.டி.வி., கேமராக்கள் வாயிலாக, கலால்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுபானங்களை சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தாலோ அல்லது வரையறுக்கப்பட்டுள்ள அளவிற்கு மேல், யாரேனும் மதுபானம் வைத்திருந்தாலோ, கலால்துறை கட்டுப்பாட்டு அறை எண், 0413-2252493, என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

