ADDED : செப் 11, 2024 02:49 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் பா.ஜ., சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் அருகே நடந்த விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வழிபாடு செய்தார்.
தொடர்ந்து, பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில்., பா.ஜ., பிரமுகர் முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காட்டேரிக்குப்பம் பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமார், ஜெயக்குமார், சுரேஷ், கணேசன், ஜெயராஜ், வில்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.
