/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்பதிவு அதிகரிக்க துண்டு பிரசுரம் வழங்கல்
/
ஓட்டுப்பதிவு அதிகரிக்க துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : மார் 27, 2024 07:10 AM

புதுச்சேரி : குறைந்த அளவு வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முறையான வாக்களார் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், வரும் லோக்சபா தேர்தலில் அதிக வாக்காளர்களை ஊக்கப்படுத்தி, அதிக எண்ணிக்கையில் ஓட்டுப்பதிவு நடந்திட ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரம், திருபுவனை, மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் உள்ளிட்ட இடங்கில் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணவை ஏற்படுத்தினர்.
இன்று, புதுச்சேரியில் உள்ள வாணரப்பேட்டை, துப்பராயபேட்டை, வம்பாகீரப்பாளையம், கதிர்காமம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.

