/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஆர்.எஸ் அரசுப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
எஸ்.ஆர்.எஸ் அரசுப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
எஸ்.ஆர்.எஸ் அரசுப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
எஸ்.ஆர்.எஸ் அரசுப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : செப் 04, 2024 07:46 AM

புதுச்சேரி, : சாரம், எஸ்.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி, சாரம் பகுதியில் அமைந்துள்ள, எஸ்.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு, மாணவ, மாணவியர், 27 பேருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் உமா சங்கரி தலைமை தாங்கினார். பள்ளி முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை கலந்து கொண்டு மாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்கி, பட்டம் இதழின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கினார்.
தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு 'பட்டம்' இதழ் வழங்கப்பட்டது. கணித ஆசிரியர் காண்டீபன், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன், எஸ்.ஆர்.எஸ் பள்ளியின் 90ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர்.