/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் தெய்வீக படைப்பு: மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன் அறிமுகம்
/
போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் தெய்வீக படைப்பு: மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன் அறிமுகம்
போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் தெய்வீக படைப்பு: மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன் அறிமுகம்
போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் தெய்வீக படைப்பு: மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன் அறிமுகம்
ADDED : ஏப் 18, 2024 06:43 AM

புதுச்சேரி : போத்தீஸ் ஸ்வர்ண மகாலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தெய்வீக படைப்பான மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன் நகைகளை அணிந்து மகிழ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போத்தீஸ் குழுமம் நிர்வாக இயக்குநர் போத்தீஸ் ரமேஷ் கூறியதாவது; சிவபெருமான் சுந்தரவடிவில் சுந்தரேஸ்வரராக கைலாயத்தில் இருந்து இறங்கி பூலோகத்தின் முதல் பெண் அரசியான மதுரை மீனாட்சியை ஆட்கொண்டு திருமணம் செய்து கொண்டதால், நமது ஆன்டிக் பிரைடல் ஜூவல்லரிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் கலெக் ஷன் என பெயர் சூட்டியுள்ளோம்.
தனித்துவமான ஆன்டிக் பிரைடல் நகைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியான கலை நயத்தில், கைவினை கலைஞர்களால் மிக நுணுக்கமாக, பரிபூரண திருமணத்திற்காக வடிவமைத்து இருக்கிறோம்.
இடப்புறம் சிவனின் அம்சமான சுந்தரேஸ்வரரும், நடுவில் பார்வதியின் சொரூபமாக மீனாட்சி அம்மனையும், வலப்புறத்தில் பவளக்கனிவாய் பெருமாள் விஷ்ணுவாக நின்று, தன் தங்கையை கன்னிகாதானம் செய்யும் கல்யாண கோலத்தை மிகத் தத்ரூபமாக பொன் நகையில் வடிவமைத்து இருக்கிறோம்.
மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீக அருளைப் பெற்று தீர்க்க சுமங்கலியாக இணைபிரியா பந்தத்துடன், எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் நிறைவாக வாழ்வர்.
ஐக்கிய நாடுகளின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் நமது பண்பாட்டின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2000 வருட பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள், துாண்களில் செதுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவங்களாலும் ஈர்க்கப்பட்டு, எங்கள் கைதேர்ந்த நிபுணர்களால் ஒவ்வொரு தங்க ஆபரணங்களையும், 22 காரட் தங்கத்தால் மிக நுணுக்கமான உருவாக்கி உள்ளோம்.
போத்தீஸ் ஸ்வர்ண மகாலின் தெய்வீக படைப்பான மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன்சை காணவும், அணிந்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறோம். போத்தீஸ் ஸ்வர்ண மகாலின் பிரத்யேக படைப்பான மீனாட்சி திருக்கல்யாண கலெக் ஷன்ஸ் சென்னை, நெல்லை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து போத்தீஸ் ஸ்வர்ண மகால் ேஹாரூம்களிலும் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு 044-40747576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்தார்.

