/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., - காங்., - சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
/
தி.மு.க., - காங்., - சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
தி.மு.க., - காங்., - சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
தி.மு.க., - காங்., - சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 15, 2024 04:59 AM
புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசும்போது, 'மத்திய அரசு, வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர நினைக்கிறது. வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஏற்க மாட்டோம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற நாட்டில் எந்த மதத்திலும் தலையிடக் கூடாது. புதுச்சேரி சட்டசபையிலும், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முதல்வர் ஏற்க வேண்டும்'என்றார். எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசும்போது, 'இதுகுறித்து முதல்வர் குறைந்தபட்சம் கருத்துகூட சொல்லவில்லை. முதல்வர் ரங்கசாமி மீது மக்கள் அதிகளவு பாசம் வைத்துள்ளனர். இவரே இதுபற்றி ஏதும் சொல்லாததால், அமைதியாக இருப்பதால், வெளிநடப்பு செய்கிறோம்' என்றார்.
இதையடுத்து, சிவா தலைமையில் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சுயேச்சை எம்.எல்.ஏ., பி.ஆர். சிவாவும் வெளிநடப்பு செய்தார்.