/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., நிர்வாகி பிறந்த நாள் விழா
/
தி.மு.க., நிர்வாகி பிறந்த நாள் விழா
ADDED : ஆக 19, 2024 05:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் (எ) சரவணன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
அவருக்கு தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி வாரியாக நிர்வாகிகள் முன்னாள் மாநில நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளையொட்டி, லெனின் வீதியில் மாநில பிரதிநிதி சந்துரு தலைமையில், கிளை செயலாளர் விஜயகுமார் ராஜசேகர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செயலாளர் சபரி, கமல் பாலா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல், பாபு மற்றும் சுகுமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிள்ளைத்தோட்டத்தில் கிளை செயலாளர் சக்திவேல் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொகுதி முழுதும் வேட்டி சேலை, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.