/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில்வே கேட் உடைந்து விழுந்ததில் தி.மு.க., நிர்வாகி மகன் பரிதாப பலி
/
ரயில்வே கேட் உடைந்து விழுந்ததில் தி.மு.க., நிர்வாகி மகன் பரிதாப பலி
ரயில்வே கேட் உடைந்து விழுந்ததில் தி.மு.க., நிர்வாகி மகன் பரிதாப பலி
ரயில்வே கேட் உடைந்து விழுந்ததில் தி.மு.க., நிர்வாகி மகன் பரிதாப பலி
ADDED : மார் 09, 2025 03:41 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் லாரி மோதியதால் ரயில்வே கேட் உடைந்து தலையில் விழுந்ததில், பைக்கில் சென்ற தி.மு.க., நிர்வாகியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் அடுத்த மழவராயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி. தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர். இவரது மகன் கலாநிதி, 29; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, வரும் 16ம் தேதி விழுப்புரத்தில் திருணம் நடைபெற இருந்தது.
சென்னையில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு, தனது ஊருக்கு நேற்று பஸ்சில் வந்தார். மாலை 4:30 மணிக்கு விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் வந்திறங்கிய இவரை, உறவினர் குணசேகரன், 40; என்பவர், தனது பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். 4:45 மணியளவில் கோலியனுார் ரயில்வே கேட் அருகே வந்தனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பாசஞ்சர் ரயிலுக்காக, அங்குள்ள ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் மூடினார். கேட் முழுமையாக மூடுவதற்குள், பண்ருட்டியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த லாரியை டிரைவர் வேகமாக இயக்கி ரயில்வே கேட்டை கடக்க முயன்றார்.
இதைப் பார்த்த குணசேகரனும், ரயில்வே கேட்டை கடப்பதற்காக பைக்கை வேகமாக ஓட்டினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரயில்வே கேட் மீது லாரி மோதியது. இதில் கேட்டின் ஒரு பகுதி இரும்பு பைப் உடைந்து, பைக்கில் பின் சீட்டில் அமர்ந்து வந்த கலாநிதி தலையில் விழுந்தது.
இதில் படுகாயமடைந்த கலாநிதியை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இன்னும் சில தினங்களில் திருமணமாக இருந்த நிலையில் கலாநிதி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.