/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்முறையை துாண்டி வெற்றி பெற தி.மு.க., திட்டம்; தே.மு.தி.க., பிரேமலதா குற்றச்சாட்டு
/
வன்முறையை துாண்டி வெற்றி பெற தி.மு.க., திட்டம்; தே.மு.தி.க., பிரேமலதா குற்றச்சாட்டு
வன்முறையை துாண்டி வெற்றி பெற தி.மு.க., திட்டம்; தே.மு.தி.க., பிரேமலதா குற்றச்சாட்டு
வன்முறையை துாண்டி வெற்றி பெற தி.மு.க., திட்டம்; தே.மு.தி.க., பிரேமலதா குற்றச்சாட்டு
ADDED : ஏப் 01, 2024 04:28 AM

விழுப்புரம் : தேர்தலில் ஆளும் தி.மு.க., கூட்டணி ஆட்சி பலம், பண பலம், ரவுடியிசம் மூலம் வன்முறையை தூண்டி வெற்றிபெற திட்டமிட்டுள்ளதாக, பிரேமலதா குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் நேற்று இரவு நடந்தது. தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அ.தி.மு.க., வேட்பாளர்கள் விழுப்புரம் பாக்கியராஜ், ஆரணி கஜேந்திரனை ஆதரித்து பேசியதாவது:
கடந்த 2011ல் தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியில், குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயன்றனர். ஜெயலலிதா, விஜயகாந்த் சிறந்த கூட்டணி அமைத்தனர். இரண்டு தலைவர்களுக்கு பிறகு, பழனிசாமியும், நானும் பொதுச்செயலர்களாக முதல் தேர்தலை சந்திக்கிறோம். .
இந்த தேர்தலில் மத்திய, மாநில அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தின் தேவைகளை நமது கூட்டணி நிறைவேற்றும். தமிழகத்தில் கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனைக்கு முடிவு கட்ட வேண்டும்.
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, 2ஜி ஊழல், காமன் வெல்த் ஊழல், ஆட்சிக்கு வருமுன் ஒன்றும், வந்தபின்பு ஒன்றும் என நடந்துகொள்ளும், மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இந்த தேர்தலில் ஆளும் தி.மு.க., கூட்டணி, ஆட்சி அதிகாரம், பண பலம், ரவுடிசம் மூலம் வன்முறையை தூண்டி வெற்றிபெற திட்டமிட்டுள்ளது. அதனை முறியடித்து, வெற்றியை தர வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலர் குமரகுரு, தே.மு.தி.க., மாவட்ட செயலர் வெங்கடேசன், அ.தி.மு.க., எம்.எல.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

