/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜே.இ.இ., தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்
/
ஜே.இ.இ., தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்
ஜே.இ.இ., தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்
ஜே.இ.இ., தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்
ADDED : மார் 30, 2024 07:10 AM

புதுச்சேரி : 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், கேரியர் கவுன்சிலிங் குறித்து கல்வி ஆலோசகர் அஷ்வின் பேசியதாவது;
தமிழக வேளாண் பல்கலையில், இளங்கலை வேளாண் படிப்பில் தமிழக மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் 85 சதவீத ஒதுக்கீட்டிலும், வெளிமாநில மாணவர்கள் 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டில் சேரலாம்.
வணிகவியல் படித்த மாணவர்கள் வேளாண் வியாபார மேலாண்மை படிப்பும், இயற்பியல், கணிதம், உயிரியல் படித்த மாணவர்கள் தோட்டக்கலை, காடு வளர்ப்பு மற்றும் பாதுகாத்தல், பட்டுப்பூச்சி வளர்ப்பு படிக்கலாம். இயற்பியல், கணிதம் படித்த மாணவர்கள், அக்ரி இன்ஜினியரிங், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் படிக்கலாம். இதற்கு 'கியூட்' தேர்வு எழுத வேண்டும். 'ஆர்க்கிடெக்' படிக்க நட்டா தேர்வும், ஜே.இ.இ., மெயின் 2ம் தாள் எழுத வேண்டும்.
நாட்டில் மொத்தம் 31 என்.ஐ.டி. உள்ளது. என்.ஐ.டி. எந்த மாநிலத்தில் உள்ளதோ, அம்மாநில மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உண்டு. 9 என்.ஐ.டி.யில் ஆர்க்கிடெக் படிப்பு உள்ளது. தேசிய ராணுவ அகாடமியில், காமர்ஸ் படித்த மாணவர்கள் தரைப்படையிலும், அறிவியல், கணிதம் படித்த மாணவர்கள் கடல் படை, விமானப்படை பிரிவில் சேரலாம்.
அகாடமியில் சேர்ந்து படிக்கும்போதே மாதந்தோறும் ரூ. 56 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். தங்கும் விடுதி, பணியாளர், ரயில் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் உண்டு. பாதுகாப்பு துறை தேர்வு செய்தால் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள கியூலனரி அகாடமி ஆப் இந்தியா, திருப்பதியில் இந்தியன் கியூலனரி இன்ஸ்டியூட் உள்ளது. பிளஸ் 2 வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கூட இதில் சேர்ந்து கேட்டரிங் படித்தால், அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்ல முடியும். என்.ஐ.டி.யில் பொறியியல் படிக்க ஜே.இ.இ., தேர்வை எழுத வேண்டும்.
கடந்த 2023ம் ஆண்டு 17,320 பேர் ஐ.ஐ.டி.யில் இந்திய அளவில் சேர்ந்தனர். அதில் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் 545 பேர். புதுச்சேரியில் இருந்து 15 பேர் மட்டுமே சேர்ந்தனர். காரைக்காலில் என்.ஐ.டி. இருப்பதால் 50 சதவீத இடஒதுக்கீடு பெற்று தப்பித்து கொண்டனர். ஜே.இ.இ., தேர்வில் தோற்றவர்களுக்கு காரணம் மொபைல்போன். இத்தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

