/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வங்கி கணக்கில் 'ரிவார்ட்ஸ் பாயிண்ட்' என வரும் லிங்கை தொடாதீர்கள் சீனியர் எஸ்.பி., கலைவாணன் எச்சரிக்கை
/
வங்கி கணக்கில் 'ரிவார்ட்ஸ் பாயிண்ட்' என வரும் லிங்கை தொடாதீர்கள் சீனியர் எஸ்.பி., கலைவாணன் எச்சரிக்கை
வங்கி கணக்கில் 'ரிவார்ட்ஸ் பாயிண்ட்' என வரும் லிங்கை தொடாதீர்கள் சீனியர் எஸ்.பி., கலைவாணன் எச்சரிக்கை
வங்கி கணக்கில் 'ரிவார்ட்ஸ் பாயிண்ட்' என வரும் லிங்கை தொடாதீர்கள் சீனியர் எஸ்.பி., கலைவாணன் எச்சரிக்கை
ADDED : ஜூலை 02, 2024 04:58 AM
புதுச்சேரி: வங்கி கணக்கில் ரிவார்ட் பாயிண்ட்ஸ் வந்துள்ளது என, வரும் லிங்கை கிளிக் செய்யாதீர்கள் என சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலானவர்களுக்கு, உங்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்ஸ் வந்துள்ளது.
இந்த லிங்க்கை ஓப்பன் செய்து தகவல்கள் பதிவிட்டால், அதனை பணமாக மாற்றி கொள்ளலாம் என எஸ்.எம்.எஸ்., வருகிறது.
இந்த லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் உள்ள பணம் மொத்தத்தையும் சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடி விடும். பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மோசடி தற்போது பூதகரமாக வளர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த வாரத்தில் மட்டும் ரூ. 15 லட்சம் அளவுக்கு இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி புகார்கள் வந்துள்ளன.
இது குறித்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், 'வங்கியில் இருந்து வருவதுபோல் எஸ்.எம்.எஸ்., இ.மெயில் மூலம் லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்யும் நபர்களின் வங்கி கணக்கு விபரங்களை திருடி, பணத்தை அபேஸ் செய்கின்றனர்.
சந்தேகமான லிங்க் எதையும் கிளிக் செய்ய வேண்டாம். எந்த வங்கியும் இதுபோன்று லிங்க்குகள் அனுப்புவது கிடையாது.
வந்திருக்கும் எம்.எஸ்.எஸ்., லிங்க் உண்மை தன்மை தெரியாதவர்கள் தங்களின் வங்கிக்கு சென்று விசாரிப்பது சிறந்தது. மீறினால் பணம் இழப்பு அபாயம் உள்ளது.
இணையதளம், சமூக ஊடங்களை பயன்படுத்தி கூட முக்கிய தகவல்களை திருடுகின்றனர். அதிகாரபூர்வமற்ற இணையதளங்களில் நுழையாமல் இருப்பது நல்லது. வங்கி அதிகாரிகள் பேசுவதாக கூறி வங்கி விபரங்களை திருடுவது, கடன் செயலிகள், வீட்டில் இருந்து வேலை, அங்கீகரிக்கப்படாத வர்த்தக மொபைல் செயலியில் பணம் முதலீடு செய்தல், பகுதி நேர வேலை, போன் நம்பரை முடக்குகிறோம்.
அதனை தவிர்க்க எண் 1 அழுத்தவும் என வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் வந்துள்ளது.
ஓ.டி.பி., என்ற வார்த்தை வந்தவுடன் சற்றும் யோசிக்காமல் அதிலிருந்து விலகி விட வேண்டும். சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம்' என்றார்.