/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இவர் யார் என்று தெரிகிறதா? கடற்கரையில் உரிமை போராளி
/
இவர் யார் என்று தெரிகிறதா? கடற்கரையில் உரிமை போராளி
இவர் யார் என்று தெரிகிறதா? கடற்கரையில் உரிமை போராளி
இவர் யார் என்று தெரிகிறதா? கடற்கரையில் உரிமை போராளி
ADDED : ஆக 11, 2024 07:04 AM

புதுச்சேரி கடற்கரையின் தென் கோடியில், டூப்ளெக்ஸ் சிலை அருகே, சோகம் தவழும் முகத்துடன் வயதானவரின் மார்பளவு சிலை இருப்பதை அனைவரும் பார்த்திருக்கலாம். அவர் யார்? என்ற கேள்விக்கு பதில் தெரியாமலேயே கடந்து சென்றிருக்கலாம்.
கடந்த காலத்தில் உலகம் முழுவதும் பரவி இருந்த அடிமைகளை மீட்டெடுக்க குரல் கொடுத்த உரிமை போராளி விக்தர் ேஷால்ேஷர் தான் அவர். 1804ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பாரீசில் பிறந்த அவர், பத்திரிகையாளராக தனது பணியை துவக்கினார்.
மன்னர் லுாயி பிலிப் ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து தனது இதழ்களில் தொடர்ந்து எழுதி மக்களை தட்டி எழுப்பினார். 1826ல், உலகம் முழுவதும் உள்ள அடிமைகளின் நிலையை பற்றிய தகவல்களை திரட்டி, அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.
அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக, அடிமைகளை மீட்கும் ஆணையத்தின் தலைவராகவும் விக்தர் ேஷால்ேஷர் நியமிக்கப்பட்டார்.
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிக்கையை தயாரித்து கொடுத்தார்.
அவரது அறிக்கை, 1848ல் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் தேசிய சபைகளில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1848 ஏப்ரல் 27ல் அடிமைத்தனத்தை ஒழித்து அரசாணை வெளியிடப்பட்டது.
பிரெஞ்சியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியில்கூட அடிமை வணிகம் அமோகமாக நடந்து வந்தது. 13 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகள்கூட அடிமைகளாக கப்பல் ஏற்றி நாடு கடத்தப்பட்ட அவலம் அரங்கேறியது.
அடிமைகளின் உரிமை போராளியான விக்தர் ேஷால்ேஷருக்கு அவர் பிறந்த மர்த்தினினிக்கில் முழு உருவச்சிலையும், புதுச்சேரியில் மார்பளவு வெண்கல சிலையும் நிறுவ பிரெஞ்சு ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்.
சிலை அமைப்பதற்கு, 1885ல், புதுச்சேரி பொதுசபை 1,500 பிரான் அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களிடம் நன்கொடை திரட்டி சிலை நிறுவவும் இசைவு தெரிவித்தது.
தற்போதுள்ள கம்பன் கலையரங்கம், அக்காலத்தில் நகரமன்றமாக இருந்தது. அங்கு பொதுக்குழு கூடும் அறையில் சிலையை நிறுவ வேண்டும் என முடிவு செய்து, கவர்னர் ரிேஷா நன்கொடை வசூல் குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருப்பினும், 1904ல், மார்பளவு சிலை முழுமை பெற்று, கம்பன் கலையரங்கம் எதிரில் நிறுவப்பட்டுள்ளது.
பின், கடற்கரை சாலையில் டூப்ளெக்ஸ் சிலை அருகே, விக்தர் ேஷால்ேஷரின் சிலை மாற்றப்பட்டது. அவரது நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 21ம் தேதி விக்தர் ேஷால்ேஷர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

