/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துண்டிக்கப்பட்ட ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சை தி பாஷ் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை முதியவரின் கையில் மீண்டும் ரத்தவோட்டம்

ADDED : ஜூன் 25, 2024 05:05 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் துண்டிக்கப்பட்ட ரத்தக் குழாயை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து, முதியவரின் கையை, தி பாஷ் மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தலாக காப்பாற்றியுள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், விபத்தில் சிக்கி அடிபட்டு உயிருக்கு போராடினார்.அவரது வலது கை எலும்பு மூட்டு நகர்ந்து, ரத்தக்குழாய் அறுபட்ட நிலையில் காணப்பட்டது.அவருடைய கையின் நிறம் மாறி கரு நிறமானது. அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கையில் ரத்த ஓட்டம் இல்லாததால் கை இழக்க நேரிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்,எல்லைப்பிள்ளைச்சாவடியில் தி பாஷ் பாண்டி ஆர்த்தோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அணுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிறுவனமான டாக்டர் வீரப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.அறுபட்ட ரத்தக்குழாயை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து இணைக்க முடிவு செய்தனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை சவாலாக ஏற்றனர். தொடர்ந்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வீரப்பன் தலைமையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஹரிஷ்,பிரதாப், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் சுதர்சன் ரெட்டி ஒருங்கிணைந்து அறுபட்ட ரத்தக் குழாயை சிகிச்சையின் மூலம் சரி செய்தனர். மீண்டும் அக்கையின் ரத்த ஓட்டத்தை வரவழைத்து நோயாளியின் கையை இழக்காமல் காப்பாற்றினர்.
கரு நிறத்தில் இருந்த நோயாளியின் கைகள், மீண்டும் ரத்த ஓட்டத்தின் மூலம் செயல்பாட்டுக்கு வந்தது.நோயாளி நல்ல நிலையில் உள்ளார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வீரப்பன் கூறும்போது, இதுபோன்ற பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளை எங்களது மருத்துவமனை சிறப்பாக செய்து வருகின்றது.எங்களது மருத்துவர்கள் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். சிக்கலான அறுவை சிகிச்சையை புதுச்சேரியிலேயே செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களது மருத்துவமனை விதைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.