sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலில் துள்ளி குதித்த டால்பின்கள்

கடலில் துள்ளி குதித்த டால்பின்கள்

கடலில் துள்ளி குதித்த டால்பின்கள்


ADDED : மார் 15, 2025 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 06:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் துள்ளி குதித்த டால்பின்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

புதுச்சேரி கடலில் நேற்று டால்பின்கள் துள்ளி குதித்து நீந்தின. அவற்றை கடற்கரையில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். மொபைல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி கடல் பகுதிகளில் டால்பின்களின் திடீர் வருகை குறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஆறுமுகம் கூறுகையில், 'இந்திய பெருங்கடல் பகுதிககளில் டால்பின்கள் பரவலாக காணப்படுகின்றன.

டால்பின்கள் பொதுவாக நடுக்கடலில் தான் கூட்டமாக இருக்கும். இருப்பினும் இனப்பெருக்க காலத்தில் நடுக்கடலில் இருந்து கடற்கரை நோக்கி வந்து திரும்பி செல்லும். அதன்படியே புதுச்சேரி கடல் பகுதியில் முகாமிட்டு சென்றுள்ளன' என்றார்.

மீனவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு டால்பின்கள் மிகவும் பிடிக்கும். நாங்கள் அவற்றை பிடித்ததில்லை. மாறாக அவை எங்களுக்கு மீன் பிடிக்க உதவுகின்றன. சூரை மீன்கள் டால்பின்களைச் சுற்றியே செல்லும். டால்பின்கள் தென்படும் இடங்களில் சூரை மீன்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். சூரை மீன் மட்டுமல்ல, மற்ற மீன்களையும் கண்டுபிடிக்க டால்பின்கள் உதவுகின்றன.

தவறுதலாக வலையில் டால்பின்கள் சிக்கினால் கூட, வலைகளைக் கிழித்து அவற்றை காப்பாற்றுகிறோம். கடலில் டால்பின்கள் நமக்கு மிகவும் முக்கியம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us