/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டரிடம் ரூ. 27 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
டாக்டரிடம் ரூ. 27 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
டாக்டரிடம் ரூ. 27 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
டாக்டரிடம் ரூ. 27 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 02, 2024 05:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 34 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காமராஜ் நகரை சேர்ந்தவர் டாக்டர் அழகம்மை, 34. இவரது மொபைல் போன் எண்ணுக்கு நேற்று அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் மும்பையில் இருந்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி பேசுவதாக தெரிவித்தார்.
அவரது பெயரில் தைவான் நாட்டில் இருந்து 20 கிலோ போதை பொருட்கள் வந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரிடம் வீடியோ மூலமாக விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக விசாரிக்க வங்கி கணக்கு விவரங்களை கேட்டனர். அவரும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 27 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தன்னிடம் பேசியவர்கள் உண்மையான போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது.
இதேபோல், புதுச்சேரி சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், 37, என்பவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைனில் ரூ. 6 லட்சத்து 62 ஆயிரத்து 368 செலுத்தி ஏமாந்தார்.
இது குறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.